மானாமதுரை : மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சீட்டு பதிய நீண்ட நேரம் காத்திருப்பதால், அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இம்மருத்துவமனைக்கு தினமம் வெளிநோயாளி 800, உள்நோயாளி 50 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு மருத்தவமனை ஊழியர், துாய்மை பணியாளர், சுகாதார பணியாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளன.
இதனால் நோயாளிகளக்கு மருந்து கட்டுதல், வெளி நோயாளிகளுக்கு சீட்டு பதிவு செய்தல், சுகாதார பணி மேற்கொள்ள ஆட்களின்றி பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகள் டாக்டரை பார்த்து சிகிச்சை பெறுவதற்காக சீட்டு பதியும் இடத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதால் மேலும் நோய் பாதிக்கும் அச்சத்தில் உள்ளனர்.
வெளி நோயாளிகள் சீட்டு பதிவதற்கு மருத்துவமனையில் உள்ள பணியாளர்களை பயன்படுத்து வதால் மருத்துவமனை பணிகளும் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து மானாமதுரை சுரேஷ் கூறியதாவது, இம்மருத்துவமனைக்கு காய்ச்சல் சிகிச்சைக்கு சீட்டு பதிய சென்ற இடத்தில் ஒருவர் மட்டுமே பெயர்களை பதிவு செய்தார். நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை ஊழியர்களே மருந்து கட்டுதல், மாத்திரை வழங்குதல் பணியுடன், சீட்டு பதியும் பணிகளையும் செய்வதால் சிரமம் ஏற்படுகிறது. இதற்கென தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும், என்றார்.