அனகாபுத்துார், பல்லாவரம் அடுத்த அனகாபுத்துார், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 30; கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நேற்று முன்தினம், பெட்ரோலை தலையில் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்தார். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், மஹாலட்சுமி நகர், பாரதி தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 47; கட்டுமான தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான அவர், வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
பெரம்பூர், ரமணா நகர், சுப்ரமணிய பாரதி தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார். அவரது மனைவி பானுமதி, 39. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மதியம் பானுமதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.