வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோஹிமா,-நாகாலாந்து சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை ஆறு பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.
![]()
|
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நெய்பியு ரியோ தலைமையில் தேசியவாத ஜனநாயக முன்னணி, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் மார்ச் 12ம் தேதியுடன் இந்த ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.
ஒரே கட்டம்
இந்நிலையில், 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 27ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
மார்ச் 2ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31ல் துவங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இதில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் இருவரும், கூட்டணி கட்சியான பா.ஜ., சார்பில் ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள், மக்கள் எழுச்சி கட்சி சார்பில் ஒருவர் என மொத்தம் ஆறு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணியுடன் பா.ஜ., இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. 40:20 என்ற விகிதாச்சார அடிப்படையில் இந்த கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடும் நிறைவடைந்தது. இதையடுத்து 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் பா.ஜ., சமீபத்தில் வெளியிட்டது.
![]()
|
பெயர் அறிவிப்பு
நாகா மக்கள் முன்னணி சார்பில் 22 வேட்பாளர்களையும், காங்கிரஸ் சார்பில் 25 வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோல ராம் விலாசின் லோக் ஜனசக்தி கட்சி, தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சார்பிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளன.
பெரும்பாலான வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement