வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத், -குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்திருந்த அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் பெண்களுக்காக, 413 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்துஉள்ளார்.
![]()
|
குஜராத் மாநிலம் ஆமதாபாதில், 'சேவா' என்ற பெண்கள் சுய உதவிக்குழு செயல்படுகிறது. இதன் தலைவரான எலா பட், சமீபத்தில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவருடன், நீண்ட காலமாக நட்புடன் பழகி வந்த அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்தார்.
நேற்று முன் தினம் எலா பட்டிற்கு அஞ்சலி செலுத்திய ஹிலாரி கிளின்டன், 'சேவா' அமைப்பின் ௫௦வது ஆண்டு விழாவிலும் பங்கேற்றார்.
இங்கு, சுரேந்திரா மாவட்டத்தில் குடா கிராமத்தில் உள்ள உப்பளங்களில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ஹிலாரி நேற்று தெரிவித்ததாவது:
மறைந்த எலா பட் மற்றும் சேவா அமைப்புடன் சேர்ந்து, ௩௦ ஆண்டுகள் பணிபுரியும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. தற்போது நாங்கள் அடுத்த, 50 ஆண்டுகள் குறித்து யோசித்து வருகிறோம்.
இன்று, கிளின்டன் உலக அமைப்பானது, இந்திய - அமெரிக்க அமைப்பான சேவா மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து, பெண்களுக்கான ௪௧௩.௮௨ கோடி ரூபாயை உலகளாவிய காலநிலை நிதியாக அறிவிக்கிறது.
![]()
|
இந்த நிதி, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் அமைப்புகளுக்கும், கல்வி மற்றும் புதிய வாழ்வாதார வளங்களை அளிக்கவும் பயன்படும்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பம், முறைசாரா துறை களில் பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் சவாலை அளிக்கிறது; இதை சமாளிக்க இந்த நிதி உதவும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement