வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜம்மு,-ஜம்மு - காஷ்மீரில், செல்வாக்குமிக்க மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை கையகப்படுத்தும் பணியை யூனியன் பிரதேச நிர்வாகம் முழு வீச்சில் செய்து வருகிறது.
![]()
|
இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், வருவாய் துறை அதிகாரிகளுக்கு பயங்கரவாத குழுக்கள் மிரட்டல் விடுத்துள்ளன.
ஜம்மு - காஷ்மீரில், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை கையகப்படுத்தும் பணியை யூனியன் பிரதேச நிர்வாகம் கடந்த மாதம் துவக்கியது.
ஜன., 31 தேதிக்கு முன், அனைத்து அரசு நிலங்களையும் மீட்க இலக்கு நிர்ணயித்து மீட்பு பணிகள் நடந்தன. இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அதை தொடர்ந்து, 'செல்வாக்குமிக்க மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பெரிய நிலப்பகுதிகளை மட்டுமே மீட்கிறோம்.
'மக்கள் வசிக்கும் சிறிய அளவிலான நிலப்பகுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது' என, அறிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டு
ஜம்மு - காஷ்மீரில், மின்சார திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, அரசு நிலங்களில் மக்கள் வசிப்பதற்கான உரிமை வழங்கும் ரோஷிணி சட்டத்தை, தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த அப்போதைய முதல்வர் பரூக் அப்துல்லா 2001ல் நடைமுறைப் படுத்தினார்.
இந்த சட்டம், குறிப்பிட்ட மதத்தினர் நில அதிகாரத்தை கைப்பற்ற வழிவகுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ரோஷிணி சட்டத்தை ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றம் 2020ல் ரத்து செய்ததுடன், உரிமை வழங்கிய நிலங்களை மீட்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையிலேய இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்து வருகிறது.
![]()
|
இதுவரை 1.87 லட்சம் ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் மட்டும் 90 ஆயிரம் ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களும், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர்களுமான ஒமர் மற்றும் பரூக் அப்துல்லா உறவினர்களிடம் இருந்து 8 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு
மூத்த அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பயங்கரவாத குழுக்களின் தலைவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.
இதனால் ஆத்திரம்அடைந்த, டி.ஆர்.எப்., எனப்படும், 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' பயங்கரவாத குழுவினர், வருவாய் துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.