வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்.........
ம.திராவிடமணி, ஈரோட்டிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்:
'முன்னாள் முதல்வர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியாரின், 128 வது பிறந்த நாளை கொண்டாடும்இந்த ஆண்டிலாவது, தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்'என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
![]()
|
அவருக்கு சில கேள்விகள்...
மடங்கள், ஆதீனங்கள், கோவில்களின் சொத்துக்கள், ஒரு சிலர் வசமிருந்ததை மீட்டு பொதுவாக்கினார், ஓமந்துாரார். ஆனால், பா.ம.க.,வை நீங்களும், உங்களின் மகனும் தனிப்பட்ட சொத்தாக்கி உரிமை கொண்டாடி வருகிறீர்களே... அது ஏன்?
ராஜாஜியும், காமராஜரும் முதல்வராகமுன்மொழிந்தும், மூன்று மாத யோசனைக்கு பிறகே, முதல்வராக பதவியேற்றார் ஓமந்துாரார். ஆனால், அரசு பதவி என்று வரும் போது, நீங்கள்,உங்களின் மகனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே... கட்சியில் வேறு நிர்வாகிகளே இல்லையா?
பாகிஸ்தான் நாட்டுடன் ரகசிய உறவு வைத்திருந்த ஹைதராபாதை, இந்தியாவுடன் இணைக்கும்படி, வல்லபபாய் படேலை நிர்பந்தம் செய்து, தேசிய ஒற்றுமைக்கு அடித்தளமிட்டவர் ஓமந்துாரார். ஆனால், தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க கோரிக்கை வைத்தவராயிற்றே நீங்கள்?
முதல்வராக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்த ஓமந்துாரார், தான் சார்ந்த காங்., கட்சியினருக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடமளிக்காமல் இருந்தார். ஆனால் நீங்களோ, மகனுக்கு மிஞ்சியது தான், மற்றவர்களுக்கு என்ற கொள்கை உடையவர் அல்லவா?
![]()
|
முதல்வராக பதவி வகித்த போது, தன்னை சந்திக்க வருபவர்கள், என்ன காரணத்திற்காக வருகின்றனர் என, துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து, அனுமதி பெற்ற பிறகே உள்ளே வர வேண்டும் என்ற பாகுபாடற்ற, நேர்மையான கொள்கையை பின்பற்றியவர் ஓமந்துாரார். உங்களால் அது சாத்தியமா?
முதல்வராக பதவி வகித்த போது, உடல் நிலை சரியில்லாமல் போன நேரத்தில், அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார் ஓமந்துாரார். ஆனால், மருத்துவக்கல்லுாரிக்கு முறைகேடாக ஒப்புதல் வழங்கி, லாபம் பார்த்தவராயிற்றே உங்களின் மகன் அன்புமணி.
ஓமந்துாராரின் பாணியை, அவரின் கொள்கைகளை கிஞ்சிற்றும் பின்பற்றாதநீங்கள், அவரை உதாரணம் காட்டி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement