வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தி.மு.க.,வைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா: சென்னையில், 'குப்பைஇல்லா பகுதிகள்' என்ற திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக, 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட இடைவெளியில், சிறிய வகை குப்பை தொட்டிகள்அமைக்கப்படும். சாலைகளில் குப்பை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.
![]()
|
டவுட் தனபாலு: சென்னையில், 35 ஆயிரம் சாலைகள் இருக்கு... நீங்க இதுல வெறும், 18ஐ மட்டும் குப்பையில்லா பகுதின்னு தேர்வு செஞ்சு வேலை பார்த்தா, முதல்வர்ஸ்டாலின் ஆசைப்படுற மாதிரி,சென்னை என்னைக்குமே சிங்கப்பூரா மாறாது என்பதில் 'டவுட்'டே இல்லை!
lll
தமிழக காங்., தலைவர் அழகிரி: உலக நாடுகளில் ஏற்படும் குழப்பத்தை விட, அ.தி.மு.க.,வில் அதிக குழப்பம் நிலவுகிறது. இதற்கு காரணம் பா.ஜ., தான். அவர்களின் சித்தாந்தம், அருகில் இருப்பவர்களின் செயல்பாடுகளை முடக்குவது. மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து, எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி வீழ்த்தியதைபோல, தமிழகத்திலும் அ.தி.மு.க.,வை வீழ்த்தி விடுவர்.
![]()
|
டவுட் தனபாலு: அடுத்த கட்சிவிவகாரத்துல நக்கல், நையாண்டி பண்றது இருக்கட்டும்... தமிழகத்துல அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரசை வீழ்த்தி, ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வுக்கு, இப்பவும்சாமரம் வீசிட்டு இருக்கிற நீங்க, இனி கனவுல கூட தமிழகத்துல காமராஜர் ஆட்சியை அமைக்க மாட்டீங்க என்பதில் 'டவுட்'டே இல்லை!
lll
பிரதமர் மோடி: விளையாட்டுதுறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க, இளைய தலைமுறையினரை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 2014க்கு முன், முந்தைய அரசு விளையாட்டு துறைக்கு, 800 - 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், இந்த பட்ஜெட்டில், 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இது மூன்று மடங்கு அதிகம்.
டவுட் தனபாலு: ஒரு காலத்துலகாமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில், பதக்க பட்டியலில் நமக்கு இடம் கிடைக்குமான்னு ஏங்கிட்டு இருந்தோம்... இப்ப நம்ம வீரர்கள் நாட்டிற்காக பதக்கங்களை குவித்து வருவதில் இருந்தே, உங்க அரசு விளையாட்டு துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம், 'டவுட்'டே இல்லாம தெரியுது!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement