கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடி கிராமத்தில், தமிழக அரசின், கால்நடை மருத்துவ முகாம் இன்று, 7ம் தேதி நடக்கிறது. முகாமில், கோவையில் உள்ள அனைத்து கால்நடை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு, சிறப்புசிகிச்சை அளிக்க உள்ளனர்.
முகாமில், மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை, கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், குடற்ப்புழு நீக்கம், சுண்டுவாத அறுவை சிகிச்சை, ஆண்மை நீக்கம், தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல், தாது உப்பு வழங்குதல் போன்றவைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தீவன பயிர் வளர்ப்பு, பறவை காய்ச்சல், விவசாயக்கடன் அட்டை, கால்நடைகளுக்கான காப்பீடு திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முகாமில், சிறந்த மாட்டுக்கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.