பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி எல்.ஐ.சி., அலுவலகம் முன் நடந்தது.
மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி, மாநில தலைவர் புவனேஸ்வரி, நகர, வட்டார தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஹின்டென் பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு லோக்சபா குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை, அதானி குழுமத்தில் மத்திய அரசு முதலீடு செய்ய நிர்பந்தித்தது குறித்து லோக்சாபவில் விவாதிக்கவும், முதலீட்டாளர்களை பாதுகாக்க மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.
* கிணத்துக்கடவு எல்.ஐ.சி., அலுவலகம் முன், காங்., கட்சி மனித உரிமை துறைதெற்கு மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் கோஷமிட்டனர்.