அன்னுார்:தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.
விவசாயத்துக்கு, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக கட்டைவண்டி போராட்டம் நடத்தியவர் நாராயணசாமி.
கோவில்பாளையம் அருகே வையம்பாளையத்தில், தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர், மறைந்த நாராயணசாமிநாயுடுவின், 99வது பிறந்தநாள் விழா அவரது மணிமண்டபத்தில் நேற்று நடந்தது.
அவரது பேரன்கள் சதீஷ், மோகன்ராஜ், பிரனேஷ் பிரபு, சாந்தாராம், பாலாஜி, அசோக் மற்றும் குடும்பத்தினர் நாராயணசாமி நாயுடுவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மணிமண்டபத்தில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என விழாவில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.