வால்பாறை;தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்கும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் வால்பாறையில் நடந்தது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் மோகன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வரும், 15ம் தேதி வால்பாறையில் மாநாடு நடத்துவது; 50 ஆண்டு காலமாக தொழிற்சங்க தலைவராக பணியாற்றும் கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), மாணிக்கம் (ஹெச்.எம்.எஸ்.,) ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவது என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.