பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை வாழ்த்தி ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்ச்சியாக, குருகுல வாழ்த்து விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் சின்னசாமி, மனோரமா, ஆலோசகர் குருமூர்த்தி தலைமை வகித்தனர்.
கோவை கே.எம்.சி.எச்., டாக்டர் மேத்யூன், லேக்சைடு ரிசார்ட் நிர்வாக இயக்குனர் மீனாட்சி, மும்பை அஸாஸி கசாய் இயக்குனர் சுனில்குமார், மும்பை ேஹாவா நிறுவன மேலாளர் கோமல், பட்டாம்பி எம்.இ.எஸ்., இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாக இயக்குனர் ஹபூர் ஆகியோர் பேசினர்.
நேதாஜியின் வீர சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில், கன்னியாகுமரியில் துவங்கி அந்தமான் நேதாஜி மியூசியம் மற்றும் சிங்கப்பூர் வரையிலான, 10 ஆயிரம் கி.மீ., நெடும்பயணத்தை நாடகம் வாயிலாக, பள்ளி தாளாளர் மணி அறிமுகம் செய்தார்.
இப்பயணத்திட்டம், கோவை முதல் லண்டன் வரை, 28 ஆயிரம் கி.மீ., பயணம் செய்த மீனாட்சி முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கட்டணமின்றி மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில், நான்காம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், 200 மாணவர்கள் இப்பயணத்துக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அடுத்த கல்வியாண்டுக்குள் இப்பயணம் நிறைவேற்றப்பட உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.