வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி- உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் அளவைக் குறைக்கும் முயற்சியாகவும், பெட்ரோலுடன் தற்போது கலக்கப்படும் எத்தனாலின் அளவை, 10 சதவீதத்திலிருந்து, 20சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
![]()
|
முதற்கட்டமாக, இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, மூன்று அரசு எரிபொருள் சில்லரை விற்பனையாளர்களின் 84 பெட்ரோல் நிலையங்களில், விற்பனை நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது.
![]()
|
பெட்ரோலில் எத்தனாலின் அளவு 1.5 சதவீதம் என்று இருந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் கலக்கப்படும் எத்தனாலின் அளவு 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்த அளவை 2025ம் ஆண்டுக்குள், 20 சதவீதமாக உயர்த்துவதற்கு, தற்போது இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை, தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் துவக்கப்பட்டு உள்ளது.
இந்தியா, தற்போது 85 சதவீத கச்சா எண்ணெயையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதை எதிர்காலத்தில் குறைத்திடவும், கார்பன்அளவை குறைக்கும் முயற்சியாகவும், அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதற்காக கரும்பு, உடைந்த அரிசி மற்றும் பிற விவசாய பொருட்களில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் பயன்படுத்தப்படுகிறது.
பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதால், கார்பன் மோனாக்சைடு வெளியேறுவது இருசக்கர வாகனங்களில் 50 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களில் 30 சதவீதமும் குறைக்கப்படும்.
மேலும், இதன் வாயிலாக, கரும்பு விவசாயிகள் கூடுதல் வருமானத்தை ஈட்டவும் முடியும். கடந்த எட்டு ஆண்டுகளில், 49 ஆயிரம் கோடி ரூபாயை விவசாயிகள் வருமானமாக ஈட்டியுள்ளனர்.
மேலும் அரசிற்கு 59,894 கோடி ரூபாய் அன்னியச் செலவாணியும் மிச்சமாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement