வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை,--'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்ட்' ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இன்ஜின் கொண்ட கனரக லாரியை அறிமுகப்படுத்தியுள்ளன.
![]()
|
இதை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இரு நிறுவனங்களும், கடந்த ஆண்டில்இருந்தே இந்த புதுமையான தொழில்நுட்பம்குறித்து ஆராய்ச்சி செய்து வந்த நிலையில்,கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், இதன் சோதனை துவங்கப்பட்டது.
டீசல் இன்ஜினைப் போலவே, ஹைட்ரஜன் இன்ஜினின் கட்டமைப்பு இருப்பதால், மிகவும் குறைந்த விலையில், எளிதாக பசுமை ஆற்றலுக்கு மாற உதவி புரிகிறது.
இது குறித்து, அசோக் லேலாண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சரவணன் கூறியதாவது:
![]()
|
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்வது, தொழில்நுட்ப செயல்பாடுகளில் அசோக் லேலண்ட் முன்னிலை வகிப்பதையும், பசுமை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் தருவதையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
நிலையான, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான போக்குவரத்தில் முன்னிலை வகிக்க இத்தகைய முயற்சிகள்உதவிகரமாக இருக்கும்.
சுயசார்பான, மாற்று எரிபொருள் வாகன பிரிவை உருவாக்குவதும், 'தற்சார்பு இந்தியா' திட்டத்தில் முன்னோடியாக திகழ்வதும் எங்களது லட்சியமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement