வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை- 'தமிழ் மக்களின் நலன்களுக்காக முன்னுரிமை அளித்து வரும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், நிர்மலா சீதாராமனுக்கு நன்றி' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
![]()
|
அவரது அறிக்கை:
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 'பட்ஜெட்'டில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை மேம்படுத்து வதற்கான மூலதன நிதி கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது 30 ஆயிரத்து 961 கோடி ரூபாய் மதிப்பிலான, 27 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2009 - 14ல் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 879 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது.
இது, சமீபத்திய பட்ஜெட்டில், 6,080 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
ராமநாதபுரம் - ராமேஸ்வரம், மதுரை, சென்னை எழும்பூர், வேலுார் காட்பாடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்களை மேம்படுத்த, 'அமிர்த பாரத்' திட்டத்தின் கீழ், 1,896 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
![]()
|
சென்னை சென்ட்ரல், கோவை, தஞ்சை - கும்பகோணம், தாம்பரம், திருநெல்வேலி, ஆவடி ரயில் நிலையங்களை மேம்படுத்த ஆய்வு நடக்கிறது.
எப்போதும் போல, தமிழ் மக்களின் நலன்களுக்காக முன்னுரிமை அளித்து வரும் பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
Advertisement