வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஈரோடு: இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்க கோரும் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை, கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
![]()
|
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், தென்னரசை வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். இதற்கான கடிதங்களை, தமிழ்மகன் உசேன் நேற்று டில்லி சென்று, தேர்தல் கமிஷனிடம் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷன் சார்பு செயலர் மனிஷ்குமார், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
![]()
|
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அ.தி.மு.க., தொடர்பான அனைத்து அலுவலக தொடர்புக்கும், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இது, இடைத்தேர்தலுக்கு மட்டும் பொருந்தும்.
இது தொடர்பாக, தமிழ்மகன் உசேன் நேற்று கடிதம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், அ.தி.மு.க., வேட்பாளரின் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில், அவர் கையெழுத்திட்டு பரிந்துரை செய்வார். அதன்மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement