நைரோபி: கென்யாவில் மூன்று சகோதரிகளை, ஒரே நேரத்தில் இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததுடன், அவர்களுடன் அட்டவணை போட்டு வாழ்ந்து வருகிறார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில், கேட், ஈவ், மேரி ஆகிய மூன்று சகோதரிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்தவர்கள்.
பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோற்றத்துடன் காணப்படும் இவர்களை, ஸ்டீவோ என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்துள்ளார். முதலில் கேட் என்பவரை ஸ்டீவோ சந்தித்து பேசிய நிலையில், இருவரும் பரஸ்பரம் காதலித்து வந்தனர்.
பின், கேட்டின் சகோதரிகளான ஈவ் மற்றும் மேரியையும், ஸ்டீவோ சந்தித்து பேசியுள்ளார். அப்போது இவரது பேச்சில் மயங்கிய சகோதரிகள், இவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
கென்யாவில் பலதார மணம் புரியும் சட்டம் அமலில் இருப்பதால், ஸ்டீவோ, மூன்று சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டார்.
இதுகுறித்து ஸ்டீவோ கூறுகையில், ''ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மேரியுடனும், செவ்வாய்க்கிழமை கேட்டுடனும், புதன்கிழமை ஈவ்வுடனும் பட்டியலிட்டு வாழ்ந்து வருகிறேன். மூன்று பேருடனும் இணைந்து வாழ்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல,'' என்றார்.