கோவில்களில் பலத்த பாதுகாப்பு: இந்து முன்னணி வலியுறுத்தல்

Updated : பிப் 07, 2023 | Added : பிப் 07, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
கோவை : நெல்லையப்பர் கோவிலில் பர்தா அணிந்த பெண் நுழைந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழக கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: தைப்பூச விழா அன்று காலை, 11:30 மணிக்கு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலினுள் கருப்பு நிற பர்தா அணிந்த நபர் நுழைந்தார். மூலஸ்தானம் வரை சென்று சுவாமி தரிசனம்
Coimbatore, Nellaiyapar kovil, Kadeswara Subramaniam, கோவை, நெல்லையப்பர் கோவில், காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி,  Hindu Front,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : நெல்லையப்பர் கோவிலில் பர்தா அணிந்த பெண் நுழைந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழக கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.


இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: தைப்பூச விழா அன்று காலை, 11:30 மணிக்கு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலினுள் கருப்பு நிற பர்தா அணிந்த நபர் நுழைந்தார். மூலஸ்தானம் வரை சென்று சுவாமி தரிசனம் செய்தார். பல்வேறு இடங்களை படம் பிடித்துள்ளார். கோவில் பணியாளர்கள் அவரை தடுக்கவில்லை; போட்டோ எடுத்தது குறித்து கேள்வி எழுப்பவில்லை. தகவல் அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்றதும், பர்தா அணிந்த பெண் நிற்காமல் ஓட்டம் பிடித்தார்.


அவர் எதற்காக வந்தார் என்பது மர்மமாக உள்ளது. கோவில் நிர்வாகம் தவறை மறைக்கப்பார்க்கிறது. பாதுகாப்பு நிறைந்த நெல்லையப்பர் கோவிலிலேயே இந்த நிலை என்றால் மற்ற கோவில்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இது கோவில்களுக்கு ஒரு சூழ்நிலையில் ஆபத்தை ஏற்படுத்தகூடும்.


latest tamil news

லுங்கி, டவுசர் அணிந்து வரக்கூடாது என்று அறிவிப்பு வைக்கப்பட்ட கோவில்களில் பர்தா மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகிறது. இந்துக்கள் வழிபாடு செய்யும் அனைத்து கோவில்களிலும் கொடிமரம் முன்பு ஆகமவிதிப்படி இந்துக்கள் அல்லாதோர் செல்லக்கூடாது என்ற அறிவிப்பு இருக்கும். தற்போது இது பல கோவில்களில் அகற்றப்பட்டுள்ளது, இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.


மீண்டும் இதுபோல் அறிவிப்புகளை வைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து தெய்வங்களை வழிபட வருவோர், இந்து தெய்வ நம்பிக்கையோடு, இந்து கலாசாரப்படி வழிபாடு செய்வதே முறையாக இருக்கும். நெல்லையப்பர் கோவில் சம்பவத்தை படிப்பினையாக கொண்டு தமிழக கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

ராம.ராசு - கரூர்,இந்தியா
07-பிப்-202321:36:06 IST Report Abuse
ராம.ராசு கடவுளை வழிபாடு செய்வதற்க்கு எந்த உடையில் போனாலென்ன? கடவுள்கள் ஒருபோதும் அப்படிச் சொல்லாது. கடவுளை வைத்து அதிகாரம் செய்பவர்களின் கட்டுப்பாடுகள் இவை. பக்தர்களைக் காப்பாற்றத்தான் கடவுள். அந்தக் கடவுள் குடி கொண்டிருக்கும் கோவிலுக்குள் அநியாயம் செய்பவர்கள் சென்றால் அந்தக் கடவுள் தண்டிக்க மாட்டாரா? மக்களைக் காப்பதற்க்குத்தான் கடவுளை வணங்குகிறோம். அந்தக் கடவுள் இருக்கும் கோவிலுக்கு காவல் துறை பாதுகாப்பு கொடுப்பது, கொடுக்கச் சொல்லுவது, அந்தக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எந்த மத்தைச் சார்ந்தவராக இருந்தாலென்ன, எந்தக் கடவுளை வழிபாடு செய்பவராக இருந்தாலென்ன? கோவிலுக்குள் வரக் கூடாது என்று தடை போடுவது, பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது அதிகார ஆளுமையைக் காட்டுவதற்க்கு மட்டுமே. உலக மக்கள் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்ற முழு நம்பிக்கை இருந்தால், பிற மதத்தைச் சேர்ந்தவர்களைப் படைத்தவரும் அந்த கடவுள்தான் என்ற நம்பிக்கை வந்தால், உடையை வைத்து தடை போடும் எண்ணம் வராது. மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் அனைத்து மதத்திலும் உண்டு. இந்து மதக் கலாச்சாரம் என்பது ஒற்றைக் கலாச்சாரம் இல்லை. சைவக் கடவுள்கள் உண்டு. அசைவக் கடவுள்கள் உண்டு. பூணூல் போட்ட பக்தர்கள் உண்டு. பூணூல் போடாத பக்தர்கள் உண்டு. கோவில்கள் தனிப்பட்ட யாருடையக் கட்டுப்பாட்டில் இருந்ததோ, அவர்களின் வழக்கத்தை கலாச்சாராமாக காட்டப்படுகிறது. அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அனைவர்களுக்குமானதாக அரசு இந்து அற நிலையத்துறை செயல்படும்போது, முன்பு அதிகாரத்தில் இருந்தவர்கள், ஏதோ இந்துக் கலாச்சாரத்துக்கு ஆபத்து வந்துவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மத வழிபாட்டு இடத்துக்குப் போனால் அதற்க்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். மகிழ்ச்சிப்பட வேண்டும். அதை விட்டு அவர்கள் மீது வெறுப்பைக் காட்டுவது, அந்தக் கடவுளுக்குச் செய்யும் துரோகம். ஒரு கிருஸ்துவ வழிபாட்டு இடத்துக்கு வேறு மதத்தவர்கள் போனால் யாரும் தடுப்பது இல்லை. ஒரு இஸ்லாம் வழிபாட்டு இடத்துக்கு மற்ற மதத்தவர்கள் போனால் யாரும் தடுப்பது இல்லை. இவ்வளவு ஏன், இந்து மதத்தில் உள்ள சிறு தெய்வக் கோவிலுக்கு மற்ற மதத்தினர் போனால் தடுப்பது இல்லை... மாறாக இன்முகத்தோடு வரவேற்கவே செய்வார்கள். பெரிய கோவில்களில்தான் இப்படிப்பட்ட தடை போடப்படுகிறது. சிறு தெய்வக் கோவிலுக்கு பிற மதத்தவர்கள் சென்றால் அவர்கள் அனுமதிக்கும்போது, பெரிய கோவில்களுக்குப் போனால் மட்டுமே ஏன் தடுக்க வேண்டும். இந்து மதக் காப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். கடவுள் அனைவருக்கும் பொதுவான சக்தி. அந்த சக்தியின் அனுக்கிரகம் அனைத்து மனிதர்களுக்கும், மதத்தினருக்கும் கிடைக்கச் செய்வதுதான் உண்மையான கடவுள் பக்தியாக இருக்க முடியும். மனிதர்களை "மனிதக் கண்ணோட்டத்தில்" பார்க்க வேண்டுமே தவிர, "மதக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது". மதத்தை வைத்து மனிதர்களைப் பிரித்தால், மனிதர்கள் மீது வெறுப்பு வைத்தால் அந்தக் கடவுளுக்கே அடுக்காது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
07-பிப்-202319:03:13 IST Report Abuse
M  Ramachandran உரலில் தலை விட்டாகி விட்டது கவலை பட்டு எந்த பிரயோஜனமுமில்லை.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-பிப்-202316:48:04 IST Report Abuse
Ramesh Sargam ஆம், பாதுகாப்பு அங்குள்ள சாமிக்கும், மற்றும் கோவில்களில் சாமி கும்பிட வருபவர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும். திமுக ஆட்சியில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X