வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பொய் சொல்வதில் பாஜ.,வினர் நிபுணர்கள். அவர்கள் பொய் சொல்லி, மக்களை தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள் என காங்., தலைவர் கார்கே கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நேருவின் காலத்திலே பல தொழில் நிறுவனங்கள் கர்நாடகாவிற்கு துவக்கப்பட்டுள்ளன. ஆனால் பாஜ., இன்று கொண்டு வந்துள்ளது போல் ஜாலம் காட்டுகிறது. முன்னதாகவே 108 ரபேல் விமானங்களை உருவாக்க எச்.ஏ.எல் தயாராக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி பிரான்சில் இருந்து ரெடிமேட் விமானங்களை கொண்டு வந்துள்ளார்.
பழைய திட்டங்களை துவங்கி வைப்பதன் மூலம், பிரதமருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு சாக்கு தேவைப்பட்டது. அதனை செயல்படுத்தி வருகிறார். அதானி விவகாரத்தை நாங்கள் விவாதிப்போம். ஏன் எங்கள் கோரி்க்கைகளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்கள் விவாத்திலிருந்து ஓடுகிறார்கள்?. நாங்கள் அல்ல.

நாங்கள் ஒரு பிரச்சனைகளை எழுப்பும் முன்பே அவர்கள் சபையை ஒத்தி வைத்தனர். எங்களின் நோட்டீஸ் பற்றி எந்த தகவலும் இல்லை. அவை ஒழுங்காக இல்லை என சொல்கிறார்கள். நாங்கள் குழப்பத்தை உருவாக்குகிறோம் என்று பாஜ., பொய் சொல்கிறார்கள். பாஜ.,வினர் பொய் சொல்வதில் நிபுணர்கள். அவர்கள் பொய் சொல்லி, மக்களை தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இவ்வாறு அவர் பேசினார்.