கோவை: சேலத்தை சேர்ந்தவர் சத்ய மூர்த்தி, 29. லெதர் கம்பெனி தொழிலாளியான இவர், கடந்த 2011-ல் கோவை மாவட்டம் வால்பாறை வந்தார். அப்போது, வனத்துறை வாகனம் மோதி இறந்தார். இழப்பீடு வழங்க கோரி கோர்ட்டில் அவரது மனைவி சுகந்தி வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க 2018 -ல் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தவறியதால் கோவை கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில், கோர்ட் ஊழியர்கள், வக்கீலுடன் இன்று(பிப்.,07) காலை கலெக்டர் அலுவலகம் சென்று பொருட்களை ஜப்தி செய்ய முயன்றனர். அப்போது இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ஜப்தி செய்வது நிறுத்தப்பட்டது.