சென்னிமலை: முருகன் கோவில் தேரோட்டத்தில், சென்னிமலை போலீசாருக்கு, பழமை மாறாத மரியாதை இன்னும் தொடர்கிறது.
சென்னிமலை முருகன் கோவில் விழாக்கள் அனைத்தும், கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தான் நடக்கும். திருத்தேரோட்டமும் அதேபோல் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும். தேரோட்டத்தில் தேர் நிலை சேர்ந்தவுடன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, மாலை அணிவித்து தேர் நிலையில் இருந்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள், ஊர்வலமாக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விடுவர். இதன்படி நேற்றும், போலீசாருக்கு மரியாதை அளித்து கவுரவம் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறியதாவது:
வி.ஐ.பி.,க்கள் கலந்து கொண்டாலும், சென்னிமலையில் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு தான் இங்கு மரியாதை.
அதேசமயம் ஊர்வலமாக ஸ்டேஷனுக்கு செல்லும் தேரோட்டி, கோவில் பணியாளர்களுக்கு ஸ்டேஷனில் இனிப்பு, காரம், டீ கொடுத்து பதில் மரியாதை செய்வர். நுாற்றாண்டுக்கும் மேலாக இந்த பாரம்பரிய மரியாதை தொடர்கிறது. இவ்வாறு கூறினர்.