சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், 'ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா'வின் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடைத்துறை டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அட்மா குழு தலைவர் அசோக்குமார், மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
இதில், 52க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மக்களுக்கும், மாணவியருக்கும் வெறிநோய் தடுப்பு மற்றும் தடுப்பூசி, அதன் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு, மனிதர்கள், விலங்குகளின் வெறிநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பேச்சு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
அட்மா குழு துணை தலைவர் தனபாலன், கால்நடைத்துறை டாக்டர்கள் விஜயகுமார், முத்துகுமார், தனலட்சுமி, சரஸ்வதி, பள்ளி உதவி தலைமையாசிரியர், கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.