வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்டில் பா.ஜ.,வினர் கூட்டம் இன்று(பிப்.,07) நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ., வினர் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

பார்லிமென்டில் பா.ஜ.,வின் வாராந்திர கூட்டம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அவை செயல்படும் போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று(பிப்.,07) நடைபெற்ற பா.ஜ., கூட்டத்தில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2023-24 உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பார்லிமென்டில் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபடுவது குறித்து, ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜ., தேசிய தலைவர் ஜேபி நட்டா , மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் ,அஸ்வினி வைஷ்ணவ், ஜெய்சங்கர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளிலும் நடத்தப்படாமல், முடங்கி வருகின்றது.

மாலை அணிவித்து பாராட்டு: கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.