வாழப்பாடி: வலசையூரை சேர்ந்த ரவுடி கொலை செய்யப்பட்டார். பதற்றம் நிலவியதால் கடைகள் அடைக்கப்பட்டு, பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
சேலம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த வலசையூரை சேர்ந்த ரவுடி காட்டூர் ஆனந்தன், 43; இவர் மீது கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்பட, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
வீராணம் போலீஸ் ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, அயோத்தியாப்பட்டணம் அடுத்த காட்டூரில் பைக்கில் சென்றபோது, மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இவருடன் சென்ற நண்பர் பிரபாகரன் படுகாயத்துடன் தப்பியுள்ளார். ஆனந்தன் உடல் காட்டூர் மயானத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
ரவுடி கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து சுக்கம்பட்டி வரை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாநகர கமிஷனர் நஜ்முல்ேஹாதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ரவுடி கொலை தொடர்பாக ரவுடிகள், உறவினர்களிடம், காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். வாழப்பாடி டி.எஸ்.பி., ஹரிசங்கரி தலைமையில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்களும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உறவினர்கள் தர்ணா
ரவுடி ஆனந்தனின் உடல் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு நேற்று பிரேத பரி சோதனை நடந்தது. ஆனந்தனின் மனைவி சத்யா, அவரது உறவினர்கள், கூட்டாளிகள், நண்பர்கள், மருத்துவமனையின் பிணவறை முன் திரண்டனர். உடலை பெற்று கொண்ட ஆனந்தனின் உறவினர்கள், வலசையூர் வழியே காட்டூருக்கு எடுத்துச் செல்வதாக கூறினர். அதை ஏற்க மறுத்த போலீசார், பிரச்னையை தடுக்க, அயோத்தியாப்பட்டணம் வழியே எடுத்துச்செல்ல அறிவுறுத்தினர். அதை எதிர்த்து, பிணவறை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா பேச்சு நடத்தி நிலைமையை எடுத்துரைத்தார். பின், சமாதானம் அடைந்து உடலை பெற்றுச்சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement