கிருஷ்ணகிரி: வேலைக்கு வெளிநாடு அழைத்துச்சென்று, மனைவியை கொடுமைபடுத்துவதாகவும், அவரை மீட்டு தரக்கோரியும், அவரது கணவர் பஷீர், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி, கோட்டை பகுதியில் நான் வசிக்கிறேன். என் மனைவி நஜ்மா, 29; ஒரு மாதத்துக்கு முன், ஹக்கீம் மற்றும் திருச்சியை சேர்ந்த ஏஜன்டுகள் தொடர்பு கொண்டு, வெளிநாட்டில் பெண்கள் ஓட்டுனர் வேலை இருப்பதாக கூறினர். அதிக சம்பளம் பெற்று தருவதாக நஜ்மாவை மூளைச்சலவை செய்தனர். இதையடுத்து நஜ்மா, 2022, டிச., 21ல் துபாய் சென்றார்.
மனைவியை நான் மொபைலில் தொடர்பு கொண்டபோது, ஒரு மாதமாக அவரை கஷ்டப்படுத்துவதாகவும், மனித அத்துமீறல் இருப்பதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார். வெளிநாட்டில் தவிக்கும் மனைவியை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.