கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு பைக்குகளை தீ வைத்து கொளுத்திய மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனா்.
கடையநல்லூர் இக்பால் நகர் ரையான் பள்ளிவாசல் தெருவை சோ்ந்தவா் காஜா மைதீன் மகன் முகமது ஜமீர் (28). இவா் ஈரோட்டில் வேலை செய்து வருகிறாா். இவர் கடந்த மூன்றாம் தேதி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கேடிஎம் பைக்கை வாங்கி உள்ளார். அவர் வழக்கம் போல் தனது பைக்கையும், தனது சகோதரி ருக்சானா பர்வின் ஸ்கூட்டர் பைக்கையும் வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார்.
இதையடுத்து அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பைக்குகளும் தீப்பற்றி எரிவதைப் பாா்த்தவுடன், அந்த பகுதியில் உள்ளவா்கள் உதவியுடன் தீயை அணைத்தார். அதற்குள்ளாக இரு பைக்குகளும் தீயில் எரிந்து முழுவதும் சேதமடைந்து விட்டது. இதுகுறித்து கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் ராம் கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.