அகர்தலா: பாஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து திரிபுராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வந்துவிட்டது என திரிபுராவில் நடந்த பேரணியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது. திரிபுரா மாநிலம் உனகோடி மாவட்டத்தில் நடந்த 'விஜய் சங்கல்ப் பேரணியில்' மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: 2018 ம் ஆண்டு முதல் பாஜ., ஆட்சியில் திரிபுரா மாநிலத்திற்கு தண்ணீர், கழிப்பறை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்துள்ளது.
திரிபுராவின் குழந்தைகள் குத்து விளக்கு ஏற்றி படிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் பாஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து திரிபுராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வந்துவிட்டது.

மேலும் 12 லட்சத்துக்கு அதிகமானோருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது பொருமாதார வசதியில் பின்தங்கி இருக்கும் மக்களுக்கு பெரிதும் உதவும். திரிபுரா மக்கள் பல ஏற்ற தாழ்வுகளை கண்டுள்ளனர்.
இந்தியாவுடன் பிரிக்க முடியாத பந்தம் அவர்களுக்கு உள்ளது. திரிபுரா மக்களுக்கு இணைப்பு என்பது கடினமான பகுதியாக இருந்தது. ஆனால் 2018 முதல் பா.ஜ., ஆட்சியின் போது அந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. வரும் தேர்தலில் திரிபுரா மக்கள் எங்களுக்கு மீண்டும் சேவை செய்ய வாய்ப்பளிப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement