சென்னை: சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நமது நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகமாகிவிட்டது. அதனை தடுக்க போதுமான சைபர் கணினி பொறியாளர்கள் நம்மிடம் இல்லை. எதிர்காலத்தில் சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதனை மாணவர்கள் தான் நிரப்ப வேண்டும், அதனால் கணினி பிரிவு தொடர்புடைய பாடங்களை படியுங்கள்.
சைபர் செக்யூரிட்டி நன்றாக இருக்க வேண்டுமென்றால் இன்றைய மாணவர்களாகிய நீங்கள் அதனை நன்றாக படிக்க வேண்டும். யாராவது லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால், அது ஆபத்து என்று அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.