வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அங்காரா: துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்க பாதிப்பையடுத்து மூன்று மாதம் அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
துருக்கியில் கடந்த சில தினங்களுக்கு முன் மூன்று முறைதொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று (பிப்-7) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய துருக்கி பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5. 6 ஆக பதிவாகி உள்ளது. ஏற்கனவே 3 முறை துருக்கியை நிலநடுக்கம் குலுக்கியதில் பல மாடி கட்டடங்கள் சரிந்து விழுந்தன. 4 ஆயிரத்திற்கும் மேலாக உயிர்ப்பலிஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துருக்கிக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிவாரண உதவி வழங்கி வருகின்றன.
இந்நிலையில் துருக்கி அதிபர் ரீசப் தைப்பி எர்டோகன், இன்று அளித்த பேட்டியில், நிலநடுக்க மீட்பு பணிகளை விரைபடுத்தவும், நாடு முழுவதும் மூன்று மாதம் அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்தார்.