வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சோழவந்தான்:சோழவந்தான் 8 வது வார்டில் உள்ள கோவிந்தம்மாள் தெருவில் வசிக்கும் டிரைவர் திருப்பதி 49, மனைவி தீபா 39, ஆகிய இருவரும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கி கிடந்தனர்.
இவர் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வத்தலகுண்டு அருகே திருமணம் செய்து வைத்து, பிப்.5ல் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை செய்து முடித்து சந்தோஷமாக தம்பதியரும் மகனும் வீடு திரும்பினர். இந்நிலையில் பிப்.6ல் மகன் சசிக்குமார் சென்னைக்கு தனது கேட்டரிங் படிப்பினை தொடங்க சென்றுள்ளார்.
தினமும் பால் வாங்க வீட்டை திறந்து வெளியே வருகிறவர்கள், காலை வரவில்லை. அருகில் உள்ள தீபாவின் சித்தப்பா தொலைபேசி தொடர்பு கொண்டுள்ளார். அழைப்பினை எடுக்கவில்லை. தூங்குகிறார்கள் போல என்று எண்ணி உள்ளார்.
இதுகுறித்து சசிக்குமார் மகன் கூறியதாவது: எனது அப்பா அம்மாவிடம் பேச சென்னையில் இருந்து அலைபேசியில் அழைத்தேன். அவர்கள் எடுக்காததால், சந்தேகபட்டு எனது நண்பரை அழைத்து, வீட்டில் உள்ளார்களா? என பார்க்கச் சொன்னேன். அவரும் அவ்வாறே வந்து பார்த்தார். ஆனால் வீட்டின் வெளியே பூட்டவில்லை எனக் கூறினார்.
இதையடுத்து நான் வீட்டின் பின்புறமாக பெட்ரூம் ஜன்னல் கதவு வழியாக அவர்கள் இருக்கிறார்களா என பார்க்கச் சொன்னேன். அப்போது அவர் பார்த்தபோது அவர்கள் இருவரும் தூக்கில் தொங்கியது எனக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவரை எனது தாத்தாவிடம் விஷயத்தை சொல்ல சொன்னேன். பிறகு நானும் உறவினர்களுக்கு அலைபேசி வாயிலாக அழைத்து தகவல் கூறினேன். அதன்பின்பு வந்து அனைவரும் பார்த்து பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே சென்று அவர்களின் உடலை மீட்க போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கடன் பிரச்சினை ஏதும் உள்ளதாக நான் அறியவில்லை என்றார். பூட்டிய வீட்டிற்குள் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி தம்பதியினர் இருவரும் இறந்துள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.