புதுடில்லி:பொது காப்பீட்டு நிறுவனமான 'கோ டிஜிட்', ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அதை திருப்பி அனுப்பி உள்ளது, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'.
கோ டிஜிட் நிறுவனம், கடந்த ஆண்டு ஆகஸ்டில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, செபிக்கு விண்ணப்பித்திருந்தது.
இந்த பங்கு வெளியீட்டின்போது 1,250 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் உள்ள 10.94 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஊழியர் பங்கு விருப்ப திட்டம் உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்த சில விளக்கங்கள் கேட்டு திருப்பி விண்ணப்பத்தை செபி திருப்பி அனுப்பி இருப்பதாக தெரிகிறது.
இந்நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அவரது மனைவியும் திரைப்பட நட்சத்திரமுமான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.
பொது காப்பீட்டு நிறுவனமான கோ டிஜிட், வாகன காப்பீடு, சொத்து காப்பீடு, பயண காப்பீடு உள்ளிட்ட பல காப்பீட்டு திட்டங்களில் செயல்பட்டு வருகிறது.