மும்பை:அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, 'ஆடி க்யு 3 ஸ்போர்ட்ஸ் பேக்' வகை 'கூப்' காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதாக, 'ஆடி'நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த காரை 2 லட்சம் ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து 'பளிச்' நிறங்களில் வரும் இந்த கார், இந்திய சந்தையில், இந்த மாதத்திற்குள் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, 'ஆடி இந்தியா' நிறுவனத்தின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறியதாவது:
நாங்கள் முதலில் அறிமுகம் செய்த 'க்யு 3' கார், இந்தியாவில் சிறப்பாக விற்பனை ஆனது. இந்த வகையை சேர்ந்த காரை தான் இந்த ஆண்டுக்கான எங்களின் முதல் அறிமுகமாக களமிறக்கியுள்ளோம். முந்தைய மாடலை விட, இந்த கார் 'ஸ்போர்ட்டி'யாக இருக்கும்.
குறிப்பிட்ட இந்த வகைவடிவைக் கொண்ட முதல் காரான 'ஆடி க்யு 3 ஸ்போர்ட்ஸ் பேக்'கின் முன்பதிவுகளை துவங்குவது எங்களை சிலிர்க்க வைக்கிறது.
கடந்த ஆண்டில் 27 சதவீதம் வளர்ச்சியை அடைந்தது போல, இந்த ஆண்டிலும் இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்ஜின் 2 லிட்டர், டி.எப்.எஸ்.ஐ, பெட்ரோல்ஹார்ஸ் பவர் 192 பி.எஸ்.,டார்க் 320 என்.எம்.,1-_100 கி.மீ., பிக்., அப் 7.3 வினாடிகள்