எண்பது வயது தாண்டிய முதியோர்கள் தங்களது வாழ்வின் கடைசி காலங்களில் மூளையில் கட்டி ஏற்பட்டு சிரமத்துக்குள்ளாவதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். மூளையில் எதனால் கட்டி ஏற்படுகிறது, இதிலிருந்து தப்பிக்க என்ன வழி எனத் தெரிந்துகொண்டால் 'பிரெய்ன் டியூமர்' எனப்படும் மூளைக் கட்டி வராமல் முதியோர்கள் தங்கள் வயோதிக காலத்தை இனிமையாகக் கழிக்கமுடியும். இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.
மூளையில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம், ரத்தக் கசிவு ஏற்பட முக்கியக் காரணி உயர் ரத்த அழுத்தம். எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் மூளையில் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளது என்றபோதும் முதியோரையே இந்த உயிரைப் பறிக்கும் நோய் அதிகம் தாக்குகிறது. 60 வயது தாண்டிய பின்னர் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். ரத்த அழுத்தம் சீராக இருக்க போதுமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, காலை யோகா பயிற்சிகள் மேற்கொள்வது அவசியம். மேலும் உணவில் உப்பு, சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும். புகை, மது உள்ளிட்ட பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
உடலில் வேறு பிரச்னைகளுக்காக ரேடியோ ஆக்டிவ் சிகிச்சை மேற்கொண்டவராக இருந்தால் ரேடியோ கதிர்கள் மூளையைத் தாக்க வாய்ப்புள்ளது. பெண்கள் மார்பக மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு ரேடியேஷன் சிகிச்சை பெற்றால் அவர்களது வயதான காலத்தில் உடலின் பிற உறுப்புகளை இந்த கதிர்கள் பாதிக்க வாய்ப்பு அதிகம். எனவே இதற்கு புற்றுநோய் மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெறுவது நல்லது.
![]()
|
வயதான ஆண்கள் பலர் புராஸ்டேட் வீக்கம் காரணமாக சிறுநீர் கழிக்க இயலாமல் சிரமப்படுவர். எனவே மருத்துவர் புராஸ்டேட் சுரப்பியை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்வார். மேலும் சிறுநீர்ப்பையில் கட்டிகள் உண்டானால் அவற்றை நீக்க ஆண்களுக்கு ரேடியேஷன் சிகிச்சை அளிக்கப்படும். இதுபோன்ற சிகிச்சைகளின்போது கவனம் தேவை. சிகிச்சை முடிந்ததும் தொடர்ந்து மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து இந்த கதிர்வீச்சில் இருந்து உடற்பாகங்களைப் பாதுகாப்பது அவசியம். 85-89 வயதுள்ள முதியோரை மூளைக் கட்டி அதிகம் தாக்குகிறது. இவர்களில் பெரும்பாலானோர் டயாலிஸிஸ் உள்ளிட்ட நாள்பட்ட சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் ஆவர்.
'மெனிங்கியோமா' என்கிற ரக மூளைக் கட்டி உடற்பருமனான முதியோர்களை அதிகம் தாக்குகிறது. எனவே வயோதிகத்தில் உடல் எடை கட்டுப்பாடு மிக அவசியம். நெருங்கிய உறவினர் யாருக்காவது மூளைக் கட்டி இருந்தால் பரம்பரையாக சிலருக்கு வயதான காலத்தில் மூளையில் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.