புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடந்த மருத்துவ முகாமை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில், மனிதக்கழிவு கலந்த சம்பவம் நடந்து, 40 நாட்களாகியும், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழக அரசு, சி.பி.சி.ஐ.டி.,யிடம் இந்த வழக்கை ஒப்படைத்தும், குற்றவாளியை கண்டுபிடிக்காதது வருத்தமளிக்கிறது.
'முதல்வர், இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணி என்பது வேறு; இதுபோன்ற சம்பவங்களில், அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் விமர்சனம் செய்வது வேறு' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவரும், இவங்க கட்சிக்காரங்களும், ஆளும்கட்சியை விமர்சிப்பதை பார்த்தா, அனேகமா லோக்சபா தேர்தலுக்குள், தி.மு.க., கூட்டணியில் இருந்து இடப்பெயர்ச்சி ஆகிடுவாங்களோ...' என, முணுமுணுத்தபடி நகர்ந்தார்.