திருமுல்லைவாயல், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் சரஸ்வதி நகர் பிரதான சாலை உள்ளது.
இங்கு சரஸ்வதி நகர் 1வது தெரு முதல், 11வது தெரு வரையும், தென்றல் நகர் மற்றும் தென்றல் நகர் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு முக்கிய சாலையாக, சரஸ்வதி நகர் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால், சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசு சிற்றுந்து உட்பட தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில், கோவில்கள், தனியார் பள்ளிகள், மருத்துவமனை, சிறு மற்றும் பல்வேறு பெரு வணிக நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
அதேபோல, திருமுல்லைவாயலில் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இப்பகுதியில், அடிப்படை தேவையான சாலை மோசமான நிலையில் உள்ளதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
--சமூக ஆர்வலர்கள், திருமுல்லைவாயல்.
பார்வை படுமா?மழை முடிந்து சாலை அமைக்கப்படும் என நம்பியிருந்த மக்கள், தற்போது ஏமாற்றத்தில் உள்ளனர். ஆவடி மேயர் உதயகுமார், தினமும் இந்த சாலை வழியாகத் தான் சென்று வருகிறார்.ஆனாலும், அவர் பார்வையில் படாமல் உள்ளது பிரமிப்பாக உள்ளது. சாலை மேலும் வலுவிழந்து பொத்தலாகும் முன், விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.