சென்னை, சென்னை, சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காளிதாசன், 22; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், 2014 பிப்., 3ம் தேதி, எழும்பூர் அருகே நடந்து சென்றார். சாலையை கடக்க முயன்றபோது, காளிதாசன் மீது இரு சக்கர வாகனம் மோதியது.
இதில், படுகாயமடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில், படுகாயத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், காளிதாசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி தங்கமணி கணேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
அதிவேகம், அஜாக்கிரதையாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதே, விபத்துக்கு காரணம். விபத்தால் 157 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனுதாரருக்கு, 70 சதவீதம் உடல் செயல்பாட்டு இயலாமை ஏற்பட்டுள்ளது.
எனவே, அவருக்கு இழப்பீடாக, 23.19 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்' வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.