திருத்தணி, சென்னை கொளத்துார், பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார், 65, அவரது மனைவி சுமதி, 52, மகன் சதீஷ், 35, மகள் விஷ்ணுபிரியா, 31, சகோதரர் சீனிவாசன், 52, அவரது மனைவி சுசீலா, 49 ஆகியோர், கடந்த 5ம் தேதி, திருப்பதி கோவிலுக்கு 'இன்னோவா' காரில் புறப்பட்டனர்.
சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அடுத்த, குன்னத்தூர் பகுதியில் வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சிறுபாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
டிரைவர் தவிர, மீதமுள்ள ஆறு பேரும் பலத்த காயமடைந்து திருவள்ளூர் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சீனிவாசன் இறந்தார்.
கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.