தேனாம்பேட்டை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், தேனாம்பேட்டை மகளிர் போலீசில் புகார் ஒன்று அளித்தார்.
புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
திருச்சியைச் சேர்ந்த மணியரசு, 29, என்பவர், பல்கலையில் நுாலகராக பணியாற்றி வருகிறார். அவர், என்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி, இரண்டு முறை கருவை கலைக்க வைத்தார்.
தற்போது என்னை ஏமாற்றி, வேறு ஒரு பெண்ணை திருமண செய்ய ஏற்பாடு செய்து வருகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை மகளிர் போலீசார் விசாரித்ததில், பெண்ணை ஏமாற்றியது உறுதியானது. இதையடுத்து, நான்கு பிரிவுகளின் கீழ் மணியரசு மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.