புதுடில்லி, ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2022ல் ௩௦ பொதுமக்கள், ௩௧ பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், லோக் சபாவில் அளித்த பதில்:மத்திய அரசு, பயங்கரவாதத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளாத கொள்கையை வைத்துள்ளதால், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
![]()
|
இங்கு,2021ல், 41 பொதுமக்கள், 42 பாதுகாப்புப் படை வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்; 192 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைந்து 30 பொதுமக்கள், 31 பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர்; 221 பேர் காயமடைந்தனர். இந்த ஆண்டின் முதல் மாதத்தில், பொதுமக்கள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 23 பேர் காயமடைந்தனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement