பழநி கோவிலை மேம்படுத்த 'மாஸ்டர் பிளான்': அமைச்சர் சேகர் பாபு தகவல்

Added : பிப் 08, 2023 | கருத்துகள் (18) | |
Advertisement
பேரூர்: ''பழநி உள்ளிட்ட முக்கிய கோவில்களில் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த 'மாஸ்டர் பிளான்' தயார் செய்யப்பட்டு வருகிறது,'' என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களுக்கு, சிவதீட்சை வழங்கும் நிகழ்ச்சி, கோவை மாவட்டம், பேரூர்
Palani Murugan kovil, Minister Sekar Babu, Palani Kumbabishekam, அமைச்சர் சேகர் பாபு,பழநி கும்பாபிஷேகம், பழனி முருகன் கோவில், Palani,  Palani Murugan Temple, பழநி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பேரூர்: ''பழநி உள்ளிட்ட முக்கிய கோவில்களில் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த 'மாஸ்டர் பிளான்' தயார் செய்யப்பட்டு வருகிறது,'' என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களுக்கு, சிவதீட்சை வழங்கும் நிகழ்ச்சி, கோவை மாவட்டம், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நேற்று நடந்தது. இதில், 85 மாணவர்களுக்கு பேரூராதீனம் மருதாச்சல அடிகளார் சிவதீட்சை அளித்தார். தொடர்ந்து, 85 மாணவர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிவதீட்சை வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கினார்.

நிறைவில், அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அர்ச்சகர், ஓதுவார், நாதஸ்வரம், தவில் உட்பட ஐந்து நிலையில் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, 15 பயிற்சி பள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் பயிற்சி முடித்த, 85 மாணவர்களுக்கு தீட்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 27 கோவில்களில், 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.


latest tamil news

இதில், 25 குளியல் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இரு குளியல் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. யானைகள் நடப்பதற்கு, 300 மீட்டர் நடைபாதை அமைக்கப்படுகிறது. பழநி கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்ததை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிலர் ஊடகங்களில் விளம்பரத்திற்காக விஷம செய்திகளை பரப்பி வருகின்றனர். ஐந்து கோவில்களை மேம்படுத்த திட்டம் தயார் செய்யப்படும் என, அறிவித்திருந்தோம்.

முதற்கட்டமாக பழநி கோவிலில் வசதிகளை மேம்படுத்த 'மாஸ்டர் பிளான்' தயார் செய்யப்பட்டு வருகிறது; விரைவில்பணிகள் துவங்கப்படும். அனைத்து கோவில்களிலும் விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் உள்ள கோவில்களின் வருவாய் மற்றும் செலவுகள் ஆராயப்பட்டு, சிறப்பு கட்டணங்கள் குறைக்கப்படும். தமிழகத்தில் ஐந்து கோவில்களில் மஹா சிவராத்திரி விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

கோவை கலெக்டர் கிராந்திகுமார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் ஹரிப்பிரியா, இணை கமிஷனர் பரஞ்சோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

R Kay - Chennai,இந்தியா
08-பிப்-202314:40:57 IST Report Abuse
R Kay கட்சிக்காரர்களுக்கெல்லாம் அப்படியே பிழைக்க வழியும் செய்து விடுங்கள்.
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
08-பிப்-202314:22:26 IST Report Abuse
Raa முதலில் கோயில் நிலங்களை மீட்டு வாங்க. 47 ஆயிரம் கோயில் நிலங்களை காணவில்லையாம். அரசு விளக்க குறிப்பெ இதை குறைத்து காட்டியுள்ளது 1985 vs 2002. உங்கள் தரம் உயர்த்துதல் யாருக்கு சாதகமாக இருக்கும் என்று மக்களுக்கு தெரியும்.
Rate this:
Cancel
Sureshkumar - Coimbatore,இந்தியா
08-பிப்-202314:15:07 IST Report Abuse
Sureshkumar ஆட்டைய போட பிளான் ரெடின்னு சொல்லுங்க . ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X