கொடைக்கானல் : கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதை போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் போதை வஸ்துக்கள் தாராளமாக கிடைக்கின்றன. ஆளுங்கட்சியினர் ஆசியுடன் தங்கு தடையின்றி தாண்டிக்குடி கீழ் மலை, மேல் மலை பகுதிகளில் மது விற்பனை ஜோராக நடந்து வருகின்றன.
போலி மதுபானங்களும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இதற்கு மத்தியில் கஞ்சா, அபின், குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளை புரோக்கர்கள் மூலம் ஆங்காங்கே சுற்றுலா பயணிகளை குறிவைத்து விற்பனை செய்கின்றனர்.
தாண்டிக்குடி கீழ்மலை பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. இதை கண்காணிக்க வேண்டிய போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி., ,கலெக்டர் தான் கொடைக்கானல் மலைப்பகுதியில் தலைவிரித்தாடும் சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.