வடமதுரை : பழநி மலை முருகன் கோயிலில் தைப்பூச விழா முடிந்தபோதிலும் அய்யலுார் வழியே பனிப்பொழிவிலும் பாதயாத்திரையாக செல்வோர் எண்ணிக்கை குறைவின்றி காணப்படுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு டிச.2வது வாரத்தில் இருந்தே பக்தர்கள் குழுக்களாக பழநிக்கு பாதயாத்திரை வர துவங்கினர். ஜன.27 ல் கும்பாபிஷேகம், நேற்றுடன் தைப்பூசம் விழா முடிந்தது.
விழா முடிந்தாலும் பழநி நோக்கி பாதயாத்திரை செல்வோர் எண்ணிக்கை குறையாமல் காணப்படுகிறது.
தற்போது பனிப்பொழிவு அதிகம் காணப்பட்ட போதும் குழந்தைகளுடன் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.
மணப்பாறை பக்தர் சாந்தி கூறுகையில், ''எல்லோரும் ஒரே நேரத்தில் பழநி சென்றடைந்தால் நெரிசலில் சிக்க நேரிடும்.
இதை தவிர்க்கவே விழா முடிந்த பின் பாதயாத்திரை செல்கிறோம். எங்களை போன்று நேர்த்திக்கடன் செலுத்துவோர் சித்திரை மாதம் வரையிலும் பாதயாத்திரை செல்வர்,'' என்றார்.