நத்தம் : நின்ஜாம் -2023 தேசிய அளவிலான தடகள போட்டிகள் பீகார் மாநிலம் பாட்னாவில் பிப். 10 முதல் 12 வரை நடக்கிறது. இந்தியா முழுவதும் 599 மாவட்டங்களில் இருந்து 5000 க்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப் போட்டியில் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு
மாணவி சந்தியா குண்டு எறிதல் போட்டியிலும், -திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி நித்ய தர்ஷினி டிரையத்லான் எனும் நெடுமுப்போட்டியிலும், -திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி கோபிநாதன் ஹேஷாதலன் எனும் தொடர் 5 போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர்.
இவர்களை திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை, செயலாளர் சிவக்குமார் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.