மதுரை : மேலுார் அருகே வச்சம்பட்டி பாண்டி. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மேலுார் பகுதியிலுள்ள நீர்நிலைகளில் சிலர் அனுமதியின்றி மீன்பிடிக்கின்றனர். இதற்காக தண்ணீரை வெளியேற்றுகின்றனர். கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்கவில்லை.
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மீன்களை வளர்க்க உணவாக இறைச்சியை இடுகின்றனர். இதனால் நீர்நிலைகள் மாசடைகின்றன. முறைப்படி ஏலம் நடத்தி மீன்பிடி குத்தகை அனுமதிக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு, கலெக்டர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், மேலுார் தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.