மதுரை : மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மத்திய மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு குறித்த புகைப்படம், டிஜிட்டல் கண்காட்சி பிப்.,4ல் துவங்கியது.
பிப்.,11 வரை நடக்கும்நிகழ்வில், சுதந்திரப் போராட்டம் குறித்த வினாடி வினா போட்டியில் வென்ற கல்லுாரி மாணவர்களுக்கு அமைச்சர் தியாகராஜன் பரிசு வழங்கினார். ஜி 20 இந்தியாவின் தலைமைத்துவம் கையேடை வெளியிட்டார். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் அன்புச்செழியன், அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பங்கேற்றனர். கள விளம்பர அலுவலர் கோபக்குமார், உதவி அலுவலர்கள் போஸ்வெல் ஆசீர், வீரமணி, வேல்முருகன் ஏற்பாடுகளை செய்தனர்.