Stream turned red with chemical waste: Pollution Control Board silent | ரசாயன கழிவு கலந்து செந்நிறமாக மாறிய ஓடை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் மவுனம்| Dinamalar

ரசாயன கழிவு கலந்து செந்நிறமாக மாறிய ஓடை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் மவுனம்

Added : பிப் 08, 2023 | கருத்துகள் (17) | |
துாத்துக்குடி : துாத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் ஆலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுகளால், கோமஸ்புரம் உப்பாற்று ஓடை செந்நிறமாக மாறி ஓடுகிறது. எனினும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை.துாத்துக்குடி - மதுரை ரோட்டில் புதுார் பாண்டியாபுரம், கோமஸ்புரம் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட மீன் பதப்படுத்தும் ஆலைகள்
Stream turned red with chemical waste: Pollution Control Board silent  ரசாயன கழிவு கலந்து செந்நிறமாக மாறிய ஓடை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் மவுனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

துாத்துக்குடி : துாத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் ஆலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுகளால், கோமஸ்புரம் உப்பாற்று ஓடை செந்நிறமாக மாறி ஓடுகிறது. எனினும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை.

துாத்துக்குடி - மதுரை ரோட்டில் புதுார் பாண்டியாபுரம், கோமஸ்புரம் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட மீன் பதப்படுத்தும் ஆலைகள் உள்ளன. மீன்களை கழுவ, பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்துகின்றனர்.

அதிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர், கோமஸ்புரம் உப்பாற்று ஓடையில் செந்நிறமாக ஓடுகிறது. கடந்த மாதம் ஒரு விழாவிற்கு வந்திருந்த கலெக்டர் செந்தில்ராஜ், ஓடை செந்நிறமாக மாறியிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து விசாரிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது: மீன் பதப்படுத்தும் ஆலைகளில் கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரங்கள் இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் அதை கண்காணிப்பதில்லை. கலெக்டர் உத்தரவிட்ட பிறகும் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.


latest tamil news


நீர் மாசுபடுதல் தடுப்புச் சட்டம் 1974ன் படி கழிவுநீரை ஆற்றில் விடுவது குறித்து வழக்கு பதிவு செய்யலாம். இக்கழிவு நீர் செல்லும் ஓடையில் பல உப்பளங்கள் உள்ளன. அங்கு தயாரிக்கப்படும் உப்பு, உணவில் பயன்படுத்தும் போது பாதிப்பு ஏற்படுத்தும். கழிவுநீர் கடலில் கலந்தால் மீன்களுக்கும் விஷமாகும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சத்யராஜ் பதிலளிக்க மறுத்தார். ஆனால், ஆலைக் கழிவுகளை ஓடையில் விட்டது தொடர்பாக நிலா சீ புட்ஸ், கிங் அகுவா, எஸ்.ஆர்.கே.,ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X