வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் ரூபாயை ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், பிரிட்டனில் இப்போது தான், டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது குறித்த ஆலோசனையில், அந்நாட்டின் மத்திய வங்கி இறங்கி உள்ளது.
பிரிட்டனின் வணிகங்கள் மற்றும் நுகர்வோர்கள் அந்நாட்டின் பணமான 'பவுண்டு', டிஜிட்டல் வடிவத்திலும் வழங்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். இதையடுத்து, மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வது குறித்து, பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய நிதி மையங்களில் ஒன்றாக பிரிட்டன் இருந்தபோதிலும், பல நாடுகள்டிஜிட்டல் கரன்சிகளை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், இவ்விஷயத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது.
உலகின் 80 சதவீத நாடுகள், ஏற்கனவே டிஜிட்டல்கரன்சியை அறிமுகம் செய்துள்ளன அல்லது, அது குறித்த ஆலோசனையில் இறங்கி உள்ளன. ஆனால், பிரிட்டனின்மத்திய வங்கியான 'பேங்க் ஆப் இங்கிலாந்து' இப்போது தான் அதற்கான துவக்க கட்ட முயற்சியில் இறங்கி உள்ளது.
![]()
|
இதற்கு 'பிரிட்காய்ன்' என பெயரிடலாம் என, தற்போதைய பிரதம மந்திரி ரிஷி சுனக் இதற்கு முன் ஆலோசனை கூறியபோது, தகுதி வாய்ந்த ஒரு கரன்சியை, 'பிட்காய்ன்' உடன் குழப்பிக் கொள்வதற்கு இடம் கொடுக்கக்கூடாது என நிராகரிக்கப்பட்டது.
இவ்விஷயத்தில் பிரிட்டனும் ஒப்பிடும்போது, இந்தியா பல படிகள் முன்னேறி, எங்கேயோ சென்றுகொண்டிருக்கிறது. இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய், சில்லரை விற்பனை மற்றும் மொத்த விற்பனை என இரு பிரிவுகளிலுமே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் பிரிட்டனுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது இந்தியா.