வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன்:
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம், கடலுக்குள் அமைப்பது குறித்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாற்றுக் கருத்து தெரிவிப்பது தவறல்ல; 'எதிர்ப்பு தெரிவிக்கிறோம்' என்ற பெயரில், வன்மத்தை கக்குவது எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்:
தி.மு.க., அரசு கொண்டு வந்த மகளிருக்கு இலவச பஸ் பயணம், 'புதுமை பெண்' திட்டம்போன்றவை, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இலவச பயண திட்டத்தில் இதுவரை, 233 கோடியே, 71 லட்சம் முறை பெண்கள்,அரசு பஸ்சில் பயணம் செய்து உள்ளனர். நாள் ஒன்றுக்குசராசரியாக, 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்து வருகின்றனர்.

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு:
2016 வரை அருந்ததியர் ஓட்டுகளில், 85 சதவீதம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாகவே இருந்தது. அவர்கள், எம்.ஜி.ஆரை, தங்கள்சமூகத்தைச் சேர்ந்தவர்என்ற கண்ணோட்டத்தில் பார்த்தனர். ஆனால், 2016க்கு பின் நடந்த இரு தேர்தல்களிலும், இந்த சமுதாய மக்களின் ஓட்டுகளில், 85 சதவீதம் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பதிவாகி உள்ளன. வரும் தேர்தலில், 100 சதவீதமும்,தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.