இந்திய குடியுரிமை வழங்க கலெக்டர்களுக்கு அதிகாரம்

Added : பிப் 08, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க, ஒன்பது மாநிலங்களை சேர்ந்த 31 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,
citizenship, collectors,Pakistan, Afghanistan, Bangladesh, Govt

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க, ஒன்பது மாநிலங்களை சேர்ந்த 31 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்துவர்களுக்கு, குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இல்லாமல், குடியுரிமை சட்டம் 1955ன் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது.


latest tamil news

இதற்கான விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், குடியுரிமை உடனடியாக கிடைக்கவும், ஒன்பது மாநிலங்களை சேர்ந்த 31 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் புதுடில்லியை சேர்ந்த 31 கலெக்டர்கள் குடியுரிமை வழங்குவது தொடர்பான முடிவுகள் எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

Sridhar - Colombo ,இலங்கை
10-பிப்-202309:22:34 IST Report Abuse
Sridhar Tamilana piranthu naanga kasta padurom pa naa oru srilankan engalukku indian citizens edukka mudiyatha???
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-பிப்-202317:39:59 IST Report Abuse
J.V. Iyer தமிழகத்தில் யாரையும் நம்பமுடியாது. இவர்களை ஹிந்துக்களாக மாற்றி குடியுரிமை பெற்று பிறகு மதம் மாற வகை செய்வார்கள் இந்த கயவர்கள்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
08-பிப்-202314:57:06 IST Report Abuse
Tamilnesan ஏற்கனவே பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சென்னை பேருந்து மற்றும் புறநகர் ரயில்களில் சர்வ சாதாரணமாக பயணம் செய்கிறார்கள். அது மட்டுமல்ல, மொபைல் திருட்டு, செயின் அறுப்பு போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்தியர்களே அடுத்துவரும் சில வருடங்களில் பங்களாதேஷ் நாட்டிற்கு அடிமையாக இப்போதே தயார் செய்து கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X