சென்னை: சிறந்த செயல்பாடுகள் மற்றும் சிகிச்சைகளை அளிக்கும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, முதலிடம் பிடித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளின், தரம் மற்றும் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக, மாதந்தோறும் அதற்கான தரவரிசையை, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டு வருகிறது.
டிச., மாதத்துக்கான தரவரிசை பட்டியலை, மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், சமீபத்தில் வெளியிட்டார். அதில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதலிடத்தையும், சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இரண்டாம் இடத்தையும், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.